Sunday 5 April 2015

காமிக் கான் விருதுகள் 2015

டியர் காமிரேட்ஸ்,

சென்ற ஆண்டு தி இந்து பத்திரிக்கைக்காக 2014ன் சிறந்த கிராபிஃக் நாவல்கள் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். இந்த கட்டுரையில்

  • தமிழில் வெளியான இரண்டு காமிக்ஸ் / கிராபிஃக் நாவல்கள்
  • இந்தியாவில் வெளியான இரண்டு காமிக்ஸ் / கிராபிஃக் நாவல்கள்
  • ஜப்பானிய மாங்கா இரண்டு (2014ல் வெளியானது)
  • அமெரிக்க கிராபிஃக் நாவல்கள் இரண்டு (2014ல் வெளியானது)
  • இங்கிலாந்தில் 2014ல் வெளியான இரண்டு கிராபிஃக் நாவல்கள்

என்று மொத்தம் பத்து புத்தகங்களை தேர்ந்தெடுத்து இருந்தோம். விருதுகள் எதனையும் வழங்கவில்லை என்றாலும், பாரம்பரியம் மிக்க தி இந்து பத்திரிக்கையில் இந்த வரிசை வெளியானதே ஒரு மரியாதை தான்.

கிட்டதட்ட 250 புத்தகங்களுக்கு மேலாக, அலசி ஆராய்ந்து படித்த இந்த புத்தகங்களின் முழுமையான வரிசை இதோ:

The Hindu Tamil Magazine Dated 26th Dec 2014 Ilamai Puthumai Segment Page No 04 Top 10 Graphic Novels of 2014

இன்று, நான்காவது இந்திய காமிக்-கான் விருதுகள் வழங்கும் விழாவில் மேலே நாம் குறிப்பிட்டுள்ள World War 1 என்ற புத்தகமே சிறப்பாக எழுதப்பட்ட கிராபிஃக் நாவல் விருதை வென்றுள்ளது என்று இதன் கதாசிரியரும், நண்பருமான ஆலன் கௌசில் தெரிவித்தார்.

Comic Con Awards Best Writer World War 1

 

இங்கிலாந்தை சேர்ந்த பழகுவதற்க்கு இனிமையான நண்பரான ஆலனுக்கும், ஓவியர் லலித் குமாருக்கும், பதிப்பாளர்கள் கேம்ப் ஃபையருக்கும் தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் நமது வாழ்த்துகள்.

Comic Con Awards Best Writer World War 2

3 comments:

  1. ஆலன் ..லலித் குமார் ...பாராட்டுகள் !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சார் ...இந்த தகவலுக்கும் ...

    ReplyDelete
  3. " பாரம்பரியம் மிக்க தி இந்து பத்திரிக்கையில் இந்த வரிசை வெளியானதே ஒரு மரியாதை தான். "

    உண்மை நண்பரே... வாழ்த்துக்கள்.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete